உள்நாடு

‘Pandora Papers’ : உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளவும்

(UTV | கொழும்பு) –    ‘பெண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பிலும், குறித்த கொடுக்கல் வாங்கல் குறித்தும் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, இலஞ்ச ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று உத்தரவிட்டுள்ளார்.

பெண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்ற பெயரில் அண்மையில் வெளியான, உலகில் உள்ள பெரும்புள்ளிகள் உள்ளிட்ட பலரின் மறைமுக சொத்துகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள், உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், குறித்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு ஒரு மாதத்துக்குள் அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கையூட்டல் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ட்விட்டர் பதிவொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய மக்கள் சக்தியின் MPக்களின் பட்டங்களை ஆராய குழு நியமிக்க பிரேரணை – ஜீவன் தொண்டமான் நடவடிக்கை

editor

35 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டது.

editor

மேலும் 303 பேர் இன்று குணம்