உள்நாடு

O/L பரீட்சைக்கு தோற்றிய 88 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியை

1957ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் ஆசிரியையாக நியமனத்தை பெற்று ஓய்வுபெற்ற ஒருவர் கல்விப் பொதுத் தரபொ.த (சா/த) பரீட்சையில் தமிழ் மொழி பாடத்துக்கு தோற்றிய நிகழ்வு ஒன்று இடம் பெற்றுள்ளது.

இம் முறை, ஹொரண பிரதேசத்தில் ஓய்வுபெற்ற 88 வயது ஆசிரியை ஒருவர் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மொழி பாடத்திற்கு தோற்றியுள்ளார்.

அங்குரவாதொட, பிரபுத்தகம என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் 1937ஆம் ஆண்டு பிறந்தவர். ஆசிரியையாக இருந்து 30 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்ற இவரின் பெயர் மிசலின் நோனா என்பதாகும்.

இவர் ஹொரண தக்சீலா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் தனது பேரன் பேத்திகளது வயதை ஒத்தவர்களுடன் அமர்ந்து பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

இவர் எந்த ஒரு ஆசிரியரின் உதவியும் இன்றி சுயமாக புத்தகங்களைப் பார்த்து தமிழ் மொழியை கற்றுக் கொண்டுள்ளார். இவர் ஆசிரியராக முதல் நியமனத்தை கண்டி மாவட்டத்தில், மடுகல்ல பிரதேசத்தில் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். கல்விக்கும் கற்றலுக்கும் வயதெல்லை கிடையாது என்றும் அவர் குறிபிட்டுள்ளார்.

Related posts

பேரூந்துக்கு எதிர்த்திசையில் பயணித்த லொறியின் சாரதி கைது

உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கொண்ட முதல் 10 நாடுகளில் இலங்கை

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகாரம்