உள்நாடு

O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

“சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன. பரீட்சை முடிவுகளை இம்மாதத்திற்குள் வௌியிட தயாராக உள்ளோம். பரீட்சை முடிவுகள் விரைவில் வெளியிடுவதே எனது தேவையாக உள்ளது.

பல்வேறு பரிசீலனைகள் மற்றும் இறுதி முடிவுகளை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இன்னும் சில நாட்கள் என்று நினைக்கிறேன்…
அதன்படி, செப்டம்பரில் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளோம்.”

Related posts

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டுவதை உடனடியாக நிறுத்துங்கள் – சஜித் பிரேமதாச

editor

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

editor

PAFFREL அமைப்பு பெண் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்த செயலமர்வு

editor