அரசியல்உள்நாடு

NPP பிரதி அமைச்சர் ஒருவரின் இலஞ்ச ஊழலை அம்பலப்படுத்திய சாணக்கியன் எம்.பி

பாராளுமன்றத்தில் நேற்று (22) பிரதி அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச ஊழலை அம்பலப்படுத்திய சாணக்கியன் எம்.பி ஆற்றிய உரை,

நேற்றைய விவாதத்திலே 2 முக்கிய விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன.

அதில் ஒன்று, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தினை இறக்குமதி செய்வதற்கான வரியானது உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தவென அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொன்னி சம்பா அரிசி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்காக அரிசியை இறக்குமதி செய்ய வரிவிதிப்புக்கள் பற்றி கவனத்திற்கொள்ளப்படவில்லை.

இது மக்களுக்கு நியாயமான விலையில் அரிசியை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்ற போதிலும் அடுத்த போகத்திற்கான நெல் அறுவடை மேற்கொள்ளும் போது நெல்லின் விலை கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும்.

இரண்டாவதாக மதுவரித் திணைக்களமானது எதனோல் உற்பத்தி செய்வோருக்கு 6 மாதங்கள் வரை வரி செலுத்துத்தாமலிருப்பவர்களுக்கு அவ் வரியை செலுத்தவென கால அவகாசத்தை வழங்கியிருந்தது. தற்போது ஒரு மாதத்திற்குள் வரியை செலுத்தவேண்டுமென குறிப்பிடப்பட்டது.

இது சிறந்த விடயமாக இருப்பினும் கூட தேர்தல் இலஞ்சமாக Bar Permit அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதென அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்டு; அதற்கான பெயர்ப்பட்டியலும் வாசிக்கப்பட்டது.

ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கிளிநொச்சி மாவட்டத்திலே 5,000 வாக்களர்களுக்கு 1 Bar என்ற ரீதியில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு புறம் வரி அதிகரிக்க வேண்டுமெனக் கூறுகின்ற அரசாங்கம் மறுபுறம் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டோரை காப்பாற்றிக்கொண்டிருக்கின்றது.

அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க இன்னும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இணைந்து களுத்துறை மாவட்டத்திலுள்ள Bruery License ஒன்றினை விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளனர். இது Cooperative இற்கு சொந்தமானதாக காணப்படுகின்றது.

Related posts

சூடுபிடித்துள்ள அரசியல் களம் – கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு கடும் போட்டி!

editor

2025 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

editor

4பேர் கொண்டவர்கள் வற் வரி எவ்வளவு செலுத்த வேண்டுமென தெரியுமா?