உள்நாடு

NMRA விவகாரம் : மென்பொருள் பொறியியலாளரின் பிணை மனு நிராகரிப்பு

(UTV | கொழும்பு) –  தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை தரவுகள் (NMRA) அழிக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த தனியார் நிறுவனமொன்றின் மென்பொருள் பொறியியலாளரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று(06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேக நபரின் பிணை மனுவை நீதவான் நிராகரித்ததுடன், ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் திவுலபிட்டியவைச் சேர்ந்த குறித்த மென்பொருள் பொறியியலாளரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த செப்டெம்பர் 28 ஆம் திகதி கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொடி லெசியின் தாயாரின் பிறந்த நாளுக்காக 2.5 மில்லியன் செலவில் விருந்துபசாரம்

பாடசாலை கல்விச் சுற்றுலாவிற்கு புதிய சட்டங்கள் உள்ளடங்கிய சுற்றுநிரூபம்

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு

editor