உள்நாடு

New Diamond பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்

(UTV | கொழும்பு) – தீ விபத்திற்குள்ளான “MT New Diamond” கப்பலினால் கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் விஷேட குழுவினால் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையின் ஊடாக கப்பல் தொடர்பில் எடுக்கவுள்ள எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கவுள்ளதுடன் கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலான மதிப்பீடுகளை உடனடியாக முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு!

தமிழ் வாக்குகளுக்காக இராணுவத்தைக் ரணில் காட்டிக் கொடுக்கின்றார் – விமல் வீரவன்ச

கரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு