உள்நாடு

New Diamond கப்பல் தொடர்பில் பெறப்பட்ட அறிக்கை இன்று நீதிமன்றில்

(UTV | கொழும்பு) – தீ விபத்துக்குள்ளான MT New Diamond கப்பலின் கெப்டன் மற்றும் குழு உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பிலான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளனர்.

தீ விபத்துக்குள்ளான MT New Diamond கப்பலின் கெப்டன் மற்றும் குழு உறுப்பினர்களிடமிருந்து குற்றப் புலனாய்வு பிரிவு அறிக்கையொன்றை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் குறித்த அறிக்கையை இன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

34 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட வசாவிளான் – பலாலி வீதி

editor

மியான்மரில் நிலநடுக்கம் – இலங்கை 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி

editor

மஹபொல கொடுப்பனவு தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

editor