உள்நாடு

MV Xpress pearl : ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க கோரிக்கை

(UTV | கொழும்பு) –  எம்வி எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்பன குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இது தொடர்பில் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த 300 டொன் இரசாயனம் இதுவரையில் கரையொதுங்கியுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.

Related posts

அலி சாஹிர் மெளலானாவின் பெயர் எம்.பியாக வர்த்தமானியில் வெளியீடு!

COPFயின் தலைவரானார் ஹர்ஷ டி சில்வா!

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )