உள்நாடு

MV X-Press Pearl : பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான இழப்பீடு வழங்கல் இன்று

(UTV | கொழும்பு) – கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் MV X-Press Pearl கப்பலினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்று (15) ஆரம்பமாகின்றது.

9,883 மீனவக் குடும்பங்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் நீர்கொழும்பு, வத்தளை, ஜா-எல, கட்டான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மீனவக் குடும்பங்களுக்காக 5,000 ரூபா இழப்பீட்டை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் 6,042 குடும்பங்களும் வத்தளையில் 1,409 குடும்பங்களும் கட்டானையில் 233 குடும்பங்களும் ஜா-எலயில் 69 குடும்பங்களும் இந்த இழப்பீட்டுத் தொகையை பெறவுள்ளனர்.

இதற்காக 50 மில்லியன் ரூபா நிதி தமக்கு கிடைத்துள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

புகையிரத பாதையை நவீனமயப்படுத்த நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரேரணைக்கு ஜனாதிபதி மறுப்பு

சிகிரியாவின் அபிவிருத்தி – சுற்றுலாப் பயணிகளை கவரும் சிறப்புத் திட்டம் – கொரியாவிடமிருந்து 2.4 பில்லியன் ரூபா உதவி

editor