வகைப்படுத்தப்படாத

Mr.லோக்கல் ரிலீஸ் திகதி இதோ…

(UTV|INDIA) சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய Mr.லோக்கல்’ திரைப்படம் மே 17ஆம் திகதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் புரமோஷன் போஸ்டர்களில் மே வெளியீடு’ என்று வந்ததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் ‘Mr.லோக்கல்’ திரைப்படம் மே 17ஆம் திகதி ரிலீஸ் ஆவது உறுதி என்று அறிவித்ததோடு, ரிலீஸ் திகதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. எனவே இந்த படம் அடுத்த வாரம் வெள்ளியன்று வெளியாவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

 

 

 

Related posts

பிரேஸிலில் அணை உடைவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

Pujith Jayasundara arrested

கடும் மழை ,வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு