விளையாட்டு

LPL தொடருக்கு யாழில் இருந்து மூவர் தெரிவு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட லங்கா பிரிமீயர் லீக்கின் புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 14ம் திகதி ஆரம்பமாக இருந்த குறித்த தொடரானது 21ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐந்து அணிகள் 23 போட்டிகளில் வி்ளையாட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், LPL தொடருக்கான அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அணியில் யாழ்ப்பாணத்தில் இருந்து மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, யாழினை பிரதிநிதித்துவப்படுத்தி டி.கபில்ராஜ், கே.டினோஷன், வை.விஜாஸ்கா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காமன்வெல்த் 2022: பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கிய இந்தியா

விடாமல் துரத்திய ரசிகரை கட்டித்தழுவி நெகிழ வைத்த தோனி (VIDEO)

ஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்? கிரிக்கெட் வாரியம் திட்டம்