உள்நாடு

KDU திருத்த சட்ட மூலம் வெள்ளியன்று சமர்ப்பிக்கப்பட மாட்டாது

(UTV | கொழும்பு) –  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) தொடர்பான திருத்த சட்ட மூலம் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் ​நேற்று (04) அறிவித்துள்ளது.

பொது மக்கள் இது தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிமசிங்க நேற்று சபையில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

வேலையை இலகுபடுத்த இலஞ்சம் கொடுக்க வேண்டாம் – அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

editor

இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை வழங்க IMF ஒப்புதல்