உள்நாடு

JUST NOW: அமெரிக்காவின் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த கப்பல் விபத்து!

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பெல்ட்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த பாரிய கப்பல் ஒன்று பாலத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பாலம் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளமையினால் பேரனத்தம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்போது பாலத்தில் சுமார் 4 வாகனங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

மீட்புக் குழுக்கள் கடுமையாக போராடி வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் பெல்ட்டிமோர் மேயர் M. Scott தெரிவித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தப் பாலம் Patapsco ஆற்றின் குறுக்கே செல்கிறது. இது ஒரு பயங்கரமான அவசரநிலை என பெல்ட்டிமோர் தீயணைப்புத் துறையின் தகவல் தொடர்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இப்போது எங்கள் கவனம் இந்த மக்களை மீட்டு மீட்கும் முயற்சியில் உள்ளதென குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அனர்த்தம் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என மீட்பு குழுவினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

 

 

Related posts

சமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி

சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

குவைத்திலிருந்து 460 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர்