உள்நாடுசூடான செய்திகள் 1

JUST NOW – யாழ் மக்களுக்கு நீதிமன்றம் விடுத்த முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் 9-9 வதிக்கு அருகில் செம்மணி பகுதியில் உள்ள அறியாலை சித்தியார்த்தி இந்துமயானத்தில், நீதிமன்ற கட்டளைகளை அமுல்படுத்தி மேற் கொள்ளப்பட்ட அகழ்வுபணிகளின் போது, மணித எலும்புக்கூட்டுத்தொகுதியுடன் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் மற்றும் பிற பொருட்கள் (Artifacts) என்பவற்றை பொது மக்களுக்கு காண்பித்து,
அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு பெறப்பெறுவதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மணிதகொலை விசாரணை பிரிவின் நிலையை பொறுப்பதிகாரி நீதிமன்றத்திற்கு வின்ணப்பத்தின் பிரகாரம் நீதிமன்றமானது அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

அதற்கமைய, செம்மணி பிரதேசத்தில் அமைந்துள்ள அறியாலை சித்துபாத்தி இந்துமயானத்தின் 2025.08.05ஆம் திகதி 13:30 மணிமுதல் 17:00 மணிவரை, மேற்கண்ட உடல்கள் மற்றும் பிற பொருட்கள் (Artifacts) காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அவற்றை பார்வையிட்டு அதிலுள்ள பொருள்களை அடையாளம் காணும்பட்சத்தில், நீதிமன்றத்தின் அல்லது குற்றப்புலனாய்வு பிரிவிற்கும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க இத்தாள் பொது மக்களை வேண்டப்படுகின்றனர்.

மேற்படி கட்டளையானது, குற்றவியல் நடவடிக்கைமுறைகள் கோவையின் சட்டத்தின் பிரிவு 7 மற்றும் 124இன் கீழ் நீதவான் என்ற ரீதியில் எனக்கு வழங்கப்பட்ட தற்துணிவின் பிரகாரம் மேற் கொள்ளப்படுகிறது.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவில் பொதுத்தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவி – ஜூலி சங்

editor

கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட 15 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு