விளையாட்டு

IPL : மேலும் இரண்டு புதிய அணிகள் இணையும் சாத்தியம்

(UTV | இந்தியா) – இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மேலும் இரண்டு புதிய அணிகளை இணைத்துக் கொள்வது தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபை அவதானம் செலுத்தியுள்ளது.

இந்தியாவின் அஹமதாபாத்தில் இன்று இடம்பெறவுள்ள வருடாந்த பொதுக் கூட்டத்தின்போது இதற்கான தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதன்படி, தற்போது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்குபற்றிவரும் 8 அணிகளுடன் மேலதிகமாக இரண்டு அணிகளை இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய இந்தியன் பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாவதற்கு குறுகிய காலமே எஞ்சியுள்ள நிலையில், புதிய அணிகள் இணைத்துக் கொள்ளப்படுவது சாத்தியமற்றது எனவும், சர்வதேச ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

Related posts

மீண்டும் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்

இலங்கைக்கு வெற்றி இலக்கு 321

ஆஸி முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது