விளையாட்டு

IPL 2022 – மார்ச் மாதம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – இந்தாண்டிற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் மார்ச் இறுதியில் தொடங்கும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்றான ஐபில் கிரிக்கெட் போட்டியின் 15 வது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தாண்டு புதிதாக லக்னௌ மற்றும் ஆமதாபாத் அணிகள் அறிமுகமாவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிற நிலையில் போட்டிகளை இந்தியாவில் நடத்த விரும்புவதாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் விரும்புவதாகவும் ஜெய் ஷா தெரிவித்தார்.

ஆனால், அதிகாரப்பூர்வமாக போட்டிகள் நடைபெறும் இடம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Related posts

T20 WC : நமீபியாவை வீழ்த்திய இலங்கை

திக்வெல்ல “டில்ஸ்கூப்” ஷாட் மூலம் பெற்ற நான்கு ஓட்டம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 ஓட்டங்கள் வெற்றி இலக்கு