விளையாட்டு

IPL – லசித் மாலிங்க விலகல்

(UTV | ஐக்கிய அரபு இராச்சியம்)- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகபந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணி வெற்றியில் இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

இந்நிலையில் இந்த வருடம் லிசித் மாலிங்க இடம் பெறமாட்டார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது. மேலும், அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

Related posts

அகில இலங்கை பாடசாலை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

இலங்கை அணியின் மூவர் உள்ளடங்கிய தர்மசேனவின் கனவு அணி

5 வது முறையாக பட்டத்தை வென்ற ஜோன்