உள்நாடு

IOC எரிபொருள் விநியோகம் முன்னேறுகிறது

(UTV | கொழும்பு) – லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நேற்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

70 தாங்கி ஊர்திகள் நேற்று எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக, இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தமது எரிபொருள் நிரப்பு நிலைய வலையமைப்புக்கு, திருகோணமலையிலிருந்து முன்னெடுக்கப்படும் விநியோகத்தை அதிகரிப்பதற்காக, மேலதிக எண்ணெய் தாங்கி ஊர்திகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

இராணுவத்தினர் 71 பேருக்கு பதவி உயர்வு

மின்சார சபை 2023 ஆம் ஆண்டிற்கான அபரிதமான இலாபத்தை அடைந்துள்ளது

அஜித் பிரசன்னவிற்கு பிணை