உள்நாடு

IMF உடனான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் : நாளை பிரதமர் விசேட உரை

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (05) பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இதுவரையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பிரதமர் கருத்து வெளியிடுவார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல பதில் தேவைப்படும் கேள்விகளின் போதே பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு.

சட்ட மா அதிபரின் சேவைக்காலத்தை நீடிக்கும் ஜனாதிபதி!

தொடர்ந்தும் தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்பு