முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கையெழுத்திட்ட IMF இணக்கப்பாட்டை மாற்றியமைத்து, தாம் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய IMF இணக்கப்பாட்டை எட்டுவோம் என தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்கியிருந்தன.
இருந்தபோதிலும், ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த தேர்தல் வாக்குறுதியை மீறி, முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கையெழுத்திட்ட அதே IMF இணக்கப்பாட்டை பின்தொடர்வதால் நமது நாட்டு மக்கள் தற்போது பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
மின்சாரக் கட்டணத்தை 33% குறைப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், நிபந்தனைகளுக்கு உட்பட்டு மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் தயாராகி வருகிறது.
சிரேஷ்ட பிரஜைகளினதும் சிறுவர்களினதும் சேமிப்பு கணக்குகளுக்கான 15% வட்டி விகிதத்தைத் தள்ளுபடி செய்தல், வெளிநாட்டு டிஜிட்டல் சேவை வழங்குநர்கள் மீது விதிக்கப்படும் வரிகள் உட்பட இது சார்ந்த பல பிரச்சினைகள் தொடர்பாக நிலையியற் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கட்டளை 27 (2) இன் கீழ் இன்று (08) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.