உள்நாடு

IMF இனது தீர்வுகள் SJP தீர்வுகளை ஒத்ததாக உள்ளது

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரேரணைகளை ஒத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நிலையற்ற பாதையில் செல்வதாக தெரிவித்தார்.

நாட்டிற்குள் மெக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான குறுகிய மற்றும் நடுத்தர கால பரிந்துரைகளை இந்த அறிக்கை எவ்வாறு உள்ளடக்கியது என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

பணவீக்கம் மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் கடனை மறுசீரமைக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கூறினார்.

கடந்த இரண்டு வருடங்களாக SJB இந்த நடவடிக்கைகளை முன்மொழிந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் பணக்காரர்கள் மீதான வரிகளைக் குறைத்து நாட்டின் வரிக் கட்டமைப்பை சீரழித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசின் பலவீனமான பொருளாதாரக் கொள்கைகளால் சர்வதேச நிதிச் சந்தைகளில் இலங்கையின் நன்மதிப்பு எவ்வாறு பாழாகிறது என்பதை SJB எப்போதும் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச மற்ற நாடுகளுடன் திறந்த வர்த்தகத்திற்கு அழைப்பு விடுத்தார், மேலும் திறமையான ஒரு தலைவரை நியமிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

Related posts

‘IMF இம்மாத இறுதியில் இலங்கைக்கு’

மூழ்கும் MV Xpress pearl : இந்தியாவிடம் உதவுமாறு கோரிக்கை

மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக சுபைர்தீன் மீண்டும் நியமனம்!