உள்நாடு

IMF மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு மாநாடு இன்று ஆரம்பமாகிறது

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் இன்று ஆரம்பமாகிறது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் இன்று(10) ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 16ம் திகதி வரை சம்பந்தப்பட்ட மாநாடு நடைபெற உள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட குழுவினர் 2022 வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளனர்.

Related posts

குண்டுதாக்குதல் வழக்கிலுள்ள நெளபர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக 7,721 குற்றச்சாட்டுகள்!

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமனம்

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்