உள்நாடு

IMF பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான கொள்கை ஒப்பந்தம்

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடன் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேவையான ஆலோசனைகளையும் ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்காக தேவையான கொள்கை உடன்பாடு எட்டப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இதன்படி, உத்தியோகபூர்வ கலந்துரையாடல் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும், “.. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய மற்றும் பசுபிக் வலய பணிப்பாளர் நேற்றைய தினம் நிதியமைச்சரையும் இன்று ஜனாதிபதியையும் சந்தித்து இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எமது கொள்கை உடன்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தினோம்…”

Related posts

கம்பஹா மாவட்டத்தின் 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு

editor

இன்று முதற்தடவையாக கூடவுள்ள கோப் குழு

ஷவேந்திர தலைமையில் இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு