உள்நாடுபிராந்தியம்

ICST பல்கலைக்கழகத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்ட 77 வது சுதந்திர தின நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வு புனானை சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழிழ்நுட்ப பல்கலைக்கழகத்தில் (ICST) பல்கலைக்கழக தவிசாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதுடன், நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த முப்படையினரின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் இரு நிமிட மெளனப்பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பதிவாளர், பிரதிப்பதிவாளர்,நிர்வாக அலுவலர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

-எஸ். சினீஸ் கான்

Related posts

இருபதுக்கு அமோக வெற்றி

 திலினி பிரியமாலி அசாதாரண சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்?

பிஸ்கட் மற்றும் சிப்ஸ் பைகளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் – மூவர் கைது

editor