உள்நாடுவிளையாட்டு

ICC சிறந்த வீரருக்கான விருதை பெற்ற வனிந்து ஹசரங்க!

(UTV | கொழும்பு) –

கடந்த ஜூன் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை இலங்கையின் வனிந்து ஹசரங்க வென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ட்ரேவிஸ் ஹெட், ஸிம்பாப்வேயின் சீன் வில்லியம்சன் ஆகியோரும் இவ்விருதுக்கான பரிந்துரைப்பட்டியலில் இருந்தனர். எனினும், இவர்களை விஞ்சி, வனிந்து ஹசரங்க இவ்விருதை வென்றுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.ஸிம்பாப்வேயில் நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட நிலையில் அவருக்கு இவ்விருது கிடைத்துள்ளது. இவ்விருது கிடைத்தமையால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நாம் தகுதி பெற்றுள்ளதால், இலங்கைக்கு முக்கியமான ஒரு தருணத்தில் இவ்விருது கிடைத்துள்ளது. மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டதால் நான் கௌரவமும் அடைந்துள்ளேன்’ என வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் 26 விக்கெட்களை சனிந்து ஹசரங்க வீழ்த்தினார். தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 5 விக்கெட் குவியலையும் அவர் பதிவு செய்தார். இதற்கு முன் வக்கார் யூனிஸ் மாத்திரமே 1990 ஆம் ஆண்டில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார். கடந்த மாதம் 91 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  பெண்கள் பிரிவில் கடந்த ஜூன் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்டனர் வென்றுள்ளார்..

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு ஏற்றவாறு ஒரு திட்டத்தை உருவாக்கி வரும் JAAF மற்றும் Solidaridad

editor

இலங்கை நிலவரங்கள் குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானம்

FIFA 2018 – மெக்சிகோவின் தடையை தகர்க்கும் முனைப்பில் பிரேசில்