விளையாட்டு

ICC ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : முதலிடம் பிடித்த வீரர்

(UTV | இந்தியா) –  ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது

தரவரிசையில் விராட் கோலி, ரோகித் சர்மா முதல் இரண்டு இடங்களையும் பிடித்துள்ளனர்.

விராட் கோலி 871 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 855 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

பாபர் அசாம் 3-வது இடத்திலும், ராஸ் டெய்லர் 4-வது இடத்திலும், டு பிளிஸ்சிஸ் ஐந்தாவது இடத்திலும், கேன் வில்லியம்சன் 6-வது இடத்திலும், ஆரோன் பிஞ்ச் 7-வது இடத்திலும், டேவிட் வார்னர் 8 இடத்திலும், டி காக் 9-வது இடத்திலும் உள்ளனர்.

3-வது போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பேர்ஸ்டோவ் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Related posts

மகளிருக்கான ஆசிய கிரிக்கெட் போட்டியில் – இலங்கைக்கு வௌ்ளிப்பதக்கம்.

பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி

editor

இன்னொரு கிரிக்கெட் உலக சாதனை. கிறிஸ் கெயிலின் சாதனை முறியடிப்பு. முழு விவரம்