உலகம்ஒரு தேடல்சூடான செய்திகள் 1

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் காஸா முதலிடம் – ஐ.நா

உலகெங்கிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 2024 ஆம் ஆண்டில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

ஆயுத மோதல்களில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை விகிதம் முந்தைய ஆண்டை விட 2024 இல் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக 41,370 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

வன்முறையின் விகிதம் அளவிடத் தொடங்கியதிலிருந்து 30 ஆண்டுகளில் இது மிக உயர்ந்த விகிதமாகும். 2023 இல் இந்த அதிகரிப்பு 21 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆண்டு மோதல்களினால் 4,500 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 7,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அறிக்கை கூறுகிறது.

“படிக்கவும், கற்றுக்கொள்ளவும், விளையாடவும் வேண்டிய குழந்தைகள் இப்போது தோட்டாக்கள் மற்றும் குண்டுகளின் கீழ் எவ்வாறு உயிர்வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். இது நம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை குழந்தைகளுக்கு எதிரான கொடுமையில் நாம் மீள முடியாத கட்டத்தில் இருக்கிறோம்,” என்று அறிக்கை கூறுகிறது.

உலகெங்கிலும் உள்ள 20 மோதல் மண்டலங்களில் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Related posts

ரங்கே பண்டாரவின் மகன் செலுத்திய வாகனம் விபத்து

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

நுகர்வோர் சட்டங்களை மீறிய 1997 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்