சூடான செய்திகள் 1

ETI பணிப்பாளர் சபைக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

(UTV|COLOMBO)-ஈ.டி.ஐ பணிப்பாளர் சபையின் ஜீவக எதிரிசிங்க , நாலக எதிரிசிங்க , அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை எதிர்வரும் 28ம் திகதி நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

ஈ.டி.ஐ நிதி நிறுவத்தின் வைப்பு பணத்தை மீள செலுத்தாமைக்கு எதிராக நீர்க்கொழும்பு கிளையில் வைப்புக்களை மேற்கொண்ட ஈ.டி.ஐ வைப்பாளர்களை காக்கும் சுயாதீன சங்கத்தின் தலைவர் அனுஷா ஜயந்த கடந்த 12ம் திகதி நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலேயே குறித்த பணிப்பாளர் சபைக்கு இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

“7 ஒரே தற்கொலை” போதகரினால் இலங்கையில் எழும் சர்ச்சை

பத்து அம்ச கருத்து நிலைப்பாடுகளை அடையாளப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

பல பகுதிகளுக்கு இன்றும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்