சட்டவிரோதமாக பாகங்களை பொருத்தி உருவாக்கப்பட்ட வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்க இன்று (14) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.
சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வௌியேறிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட சுஜீவ சேனசிங்க,
நான்காவது முறையாக தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் அரசியலில் ஈடுபடுபவர்களை வேட்டையாடும் நிலையை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் அரசியல்வாதிகளை அரசியலை கைவிட வைக்க முயற்சிப்பதாகவும், எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வதாகவும் சுஜீவ சேரசிங்க மேலும் குறிப்பிட்டார்.