அரசியல்உள்நாடு

CIDயில் ஆஜராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் CIDயில் ஆஜராகவுள்ளார்.

மருந்து இறக்குமதி தொடர்பாக கெஹலிய ரம்புக்வெல்ல முன்னதாக CIDயில் முறைப்பாடு அளித்திருந்தார். இந்தப் முறைப்பாடுடன் தொடர்புடைய விசாரணைகளின் கீழ், கடந்த அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் ஏற்கனவே CIDயில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அமைச்சரவையின் கூட்டு பொறுப்பிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மின்துண்டிப்பு அமுல் குறித்து இன்று தீர்மானம்

புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா – உயிருடன் இருப்பதை உறுதி செய்தார்

editor

பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்திம் ஆரம்பமானது!