மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி தனது தனிப்பட்ட பிரச்சினை ஒன்றுக்காக குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்தில் இன்று (21) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்திற்கு இன்று காலை வருகை தந்த பியூமி ஹன்சமாலி நீண்ட நேரத்தின் பின்னர் வெளியில் வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனது தனிப்பட்ட காரணத்திற்கான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்கே பல நேரம் எடுத்ததாகவும், தனக்கெதிரான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் பியூமி ஹன்சமாலி மேலும் தெரிவித்துள்ளார்.