அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | CIDக்கு இன்று வர வேண்டாம் – சமன் ஏக்கநாயக்கவிற்கு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கயின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (01) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று அவர் முன்னிலையாக வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் தொடர்பான விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிக்க இன்று காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இதற்கு முன்னர் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக சமன் ஏக்கநாயக்க இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

வீடியோ

Related posts

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலி

editor

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜெரோம்!

விலங்குகளின் நலனுக்கு முன்னுரிமை வழங்குங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor