உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் CID யினரால் கைது

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

2022 மே 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைதுசெய்யப்படுவதை, தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றை கோரியிருந்தார்.

எனினும், அவரது முன்பிணை கோரிக்கை கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவினால் இன்று நிராகரிக்கப்பட்டது.

இந் நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts

பராக்கிரம வாவிக்குள் பஸ் விழுந்ததில் 23 பேர் காயம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 76ஆவது குடியரசு தின நிகழ்வுகள்

editor

UTV பொதுத்தேர்தல் விசேட ஒளிபரப்பு