அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | BREAKING NEWS – தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல கைது

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் சபாநாயகர் நேற்று (11) பயணித்த ஜீப் மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

சப்புகஸ்கந்த தெனிமுல்ல பகுதியில் இந்த விபத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்த 25 வயது பெண், அவரது 6 மாத குழந்தை மற்றும் அவரது 55 வயது பாட்டி ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த குழந்தை சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வீடியோ

Related posts

சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் CID இனால் கைது

குண்டுவெடிப்பு திட்டம் எப்படி? அசாத் மௌலானாவின் மிக முக்கிய வாக்குமூலம் இதோ

விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ள தேசபந்து தென்னகோன்

editor