சூடான செய்திகள் 1

BC படிவத்தை கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் செயலகம்

(UTV|COLOMBO)-வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கான தேருனர் இடாப்பு மீளாய்வு படிவத்தை (BC Form) சரியான முறையில் பூர்த்தி செய்து அவசரமாக கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் பதிவேடுகளுடன் தொடர்புடைய இந்த படிவத்தை வீட்டுக்கு வீடு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் 90 வீதமான படிவங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை சரியான முறையில் பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறும் தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிலர் இறுதித்தருணம் வரையில் குறித்த தேருனர் இடாப்பு மீளாய்வு படிவத்தை ஒப்படைக்காததால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக தேர்தல் தலைமையகம் தெரிவிக்கின்றது.

எதிர்காலத்தில் பல்வேறு தேர்தல்கள் நடைபெற இருப்பதால் அவற்றிற்கு குறித்த வாக்காளர் பட்டியலே கருத்திற்கொள்ளப்படும் என தேர்தல் தலைமையகம் மேலும் தெரிவிக்கின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

UTVகிராத் போட்டியின் பரிசளிப்பு விழா | UTV Qirat Competition 2023 Prize-giving Ceremony – First Stage

களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்

SJB உடன் இணைந்து செயல்பட UNP இணக்கம்

editor