உணவு நஞ்சாதல் காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று நகர சபையின் தலைவர் மஹ்தி அவர்கள் பார்வையிட்டார்.
அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை 19 ஆக அதிகரித்துள்ளதோடு.
அதில் பெண்கள் 10 பேரும். ஆண்கள் 6 பேரும். சிறுவர்கள் 03 பேரும் உள்ளடங்குகிறார்கள்.
இதேபோன்று மூதூர் வைத்தியசாலையில் மூவரும் நிலாவெளியில் இருவரும் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.
நேற்று (22) அதிகாலை 4 மணியிலிருந்து வயிற்றோட்டம், வாந்தி, அதிக உஷ்ணத்துடனான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படவே இந்நோயாளிகள் அவதியுற்ற நிலையில் வைத்தியஸசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் விசாரணைகள் செய்த போது அவர்கள் அனைவரும் நேற்றுமுன் (21) இரவு சுட்ட கோழி இறைச்சியோடு உணவை சாப்பிட்டதாகவும் அந்த உணவை ஒரே கடையிலே வாங்கியதாகவும் கூறுகின்றனர்.
அனுமதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு ஏற்பட்ட இந்த வியாதிகளுக்கு குறிப்பிட்ட அந்த உணவு தான் காரணம் என வைத்தியர்களின் அறிக்கைகள் மற்றும் பரிசோதனைகள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டால் அவ் உணவுகளை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
-ஹஸ்பர் ஏ.எச்