உயர் கல்வி துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி நடைபோடும் Amazon College & Campus வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம் என்பதற்கான விருதை Business Global International Award Organisation (BGIA) என்ற அமைப்பினால் 2025 ஜூலை மாதம் 26 ஆம் திகதி விளையாட்டு அமைச்சின் பிரதான காரியாலயத்தில் பெற்றுக்கொண்டது.
Amazon உயர் கல்வி நிறுவனமானது கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவில் பதியப்பட்ட நிறுவனம் ஆகும்.
மேலும் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
அதுமட்டுமின்றி இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இலங்கை மாணவர்களுக்கு உள்நாட்டிலேயே உயர் பட்டப்படிப்பை தொடருவதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்றது.
Diploma முதல் HND Degree வரையிலான பட்டங்களை பல துறைகளில் வழங்கி வருகின்றது.
இன்று வரை Amazon College & Campus சுமார் 6 விருதுகளை சொந்தமாக்கிக் கொண்டுள்ளது என்று Amazon College & Campus கல்விப் பணிப்பாளர் Ilham Marikkar தெரிவித்துள்ளார்.