உள்நாடு

A/L பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்று (07) வெளியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இல் பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்த மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மற்றும் 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு குறிப்பிட்ட காலத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் ஓகஸ்ட் 7 முதல் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை ஒன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ் இந்திகா குமார லியனகே குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரச கணக்காய்வு குழுவின் தலைவராக மீண்டும் லசந்த அழகியவன்ன

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

editor

உணவகம் இடிந்து விழுந்ததில் 6 பாடசாலை மாணவர்கள் காயம்

editor