வணிகம்

குறைவடைந்துள்ள மரக்கறிகளின் விலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் மனித வளத்தில் 30 சதவீதத்தினர் விவசாயத்துறையில் ஈடுபட்டிருப்பதாகவும், இதன்மூலம் மொத்த உற்பத்திக்கு 9 சதவீத பங்களிப்பு இடம்பெறுகிறது என்று வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

தேசிய பாலுற்பத்தி தொழில்துறை குறித்து அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தோரின் முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பாலுற்பத்தி தொழில்துறை விரிவான வகையில் பங்களிப்புச் செய்ய முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

இந்த கலந்துரையாடவில் நீல்சன் ஸ்ரீலங்கா, பொண்டேரா பிரெண்டிஸ் லங்கா போன்ற நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related posts

சோளச் செய்கையாளர்களுக்கு அதிகளவு அறுவடை

2018 – 2020 தெங்கு உற்பத்தித்துறையை மேம்படுத்த நடவடிக்கை

கறுவா உற்பத்திக்கு உயர்ந்தபட்ச பெறுமதியை வழங்க நடவடிக்கை