வகைப்படுத்தப்படாத

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு…

(UTV|INDIA)-உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தெஹ்ரி மாவட்டம் கோட் கிராமத்தில் இன்று அதிகாலையில் திடீரென  நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஒரு வீடு முழுவதும் இடிபாடுகளில் புதைந்தது. தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு சென்று வீட்டிற்குள் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால், 10 வயது சிறுமியை மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது. மீதமுள்ள 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கடுவல மாநகரத்தை மேம்படுத்த நடவடிக்கை

SLMC ordered to register all foreign graduates

அமெரிக்காவுடன் மீண்டும் வர்த்தகம் செய்ய சீனா விருப்பம்…