சூடான செய்திகள் 1

UPDATE-ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகினார் கோட்டா…

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) காலை மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு ஆஜராகியுள்ளார்.


பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் இன்று(29), ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

குறித்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவல்களுக்கு அமைய அவரிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

வசந்த கரன்னாகொட – ரொஷான் குணதிலக ஆகியோரது பதவி நிலைகளில் உயர்வு

2019ம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியாளராக என் சகோதரன்…

பிரபல நாடொன்றின் தூதுவராக ஜனாதிபதி செயலாளர்?