வணிகம்

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் எவ்வித அறிவிப்பும் இல்லை

(UTV|COLOMBO)-சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை 158 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வௌியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என்றும் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க தெரிவித்துள்ளார்.

எனினும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு, நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கப்படுகின்றன.

இதனடிப்படையில், விலைத் திருத்தம் அவசியமானதா என்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் கீழ் ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கிளிநொச்சி வெள்ள நிவாரணப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை – சதொச நிறுவனத் தலைவர் விளக்கம்

கொடித்தோடை செய்கை வர்த்தக செய்கையாக விஸ்தரிப்பு-விவசாய திணைக்களம்

கடன் பெற்றவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு