வகைப்படுத்தப்படாத

பிணை முறி விநியோகம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க மத்திய வங்கி ஆளுநர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில்

(UDHAYAM, COLOMBO) – பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு இன்று வாக்குமூலங்களை பதிவுசெய்யவுள்ளது.

நீதி அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இதில் முதலாவதாக வாக்குமூலம் வழங்க வருமாறு தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் 2016 மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், பிணை முறி விநியோகம் தொடர்பாக மக்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகள் என்பன பதிவுசெய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இந்தப் பணிகள் இன்று காலை கொழும்பு நீதிமன்ற காரியாலய வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக நீதி அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது

Sudan suspends schools after student killings

அம்பாரை முஸ்லிம்களுக்கு அமைச்சர் ரிஷாட் அழைப்பு