சூடான செய்திகள் 1

வைத்தியர்களது பணிப்புறக்கணிப்பில் எவ்வித நியாயமும் இல்லை…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று(03) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பானது எவ்விதத்திலும் நியாயமற்ற ஒரு பணிப்புறக்கணிப்பு என்றும், மக்களை தவறான வழிக்கு இட்டு செல்லும் பணிப்புறக்கணிப்பு என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலருக்கும் அரச வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்த போதும் அவற்றுக்கான தீர்வுகள் எவையும் இதுவரை பெற்றுத்தரப்படவில்லை என தெரிவித்து இன்று (03) அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீனவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி

முன்னாள் அமைச்சர்களின் அதி சொகுசு வீடுகள் பற்றி விசாரணைகள் ஆரம்பம்!

Shafnee Ahamed