வகைப்படுத்தப்படாத

செல்லப்பிராணி வளர்ப்பவர்களா நீங்கள்?

(UTV|AMERICA)-செல்லமாக வீட்டில் பிராணிகளை வளர்க்க நினைப்போரின் முதல் தேர்வே நாய் தான். மிகுந்த பராமரிப்புடன் வளர்க்கப்பட்டாலும் பிராணிகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியை சேர்ந்த க்ரெக் மண்டவுபெல் என்ற 48 வயது நபர் வளர்த்த நாயே அவருக்கு வினையாகிப்போயுள்ளது.

தன்னுடைய நாய் நாக்கால் தன்னுடைய உடல் பாகங்களை நக்கும் போது, அதனை கண்டுகொள்ளாமல் இருந்த க்ரெக் கடும் காய்ச்சல், வாந்தி போன்றவற்றால் அவதிக்குள்ளாகியுள்ளார். தொடக்கத்தில் சாதரணமாக எடுத்துக்கொண்டதன் விளைவாக உடல் முழுவதும் ஆங்காங்கே புண் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்ற பின்னர்தான், அவரது உடலில் பதோகென் (pathogen) என்ற பாக்டீரியா கலந்துள்ளது தெரியவந்துள்ளது. நாய் அவரை நக்கும் போதோ அல்லது கடிக்கும் போதோ எச்சில் வழியாக இந்த பாக்டீரியா அவரது ரத்தத்தில் கலந்துள்ளது.
இதன் விளைவாக, அவரது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை அழுகிய நிலைக்கு செல்லவே உடனே அந்த உறுப்புகள் அவரது உடலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. முகத்தில் இருக்கும் மூக்கும் அழுகிப்போக தற்போது அது நீக்கப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Premier opens ‘Enterprise Sri Lanka’ exhibition in Anuradhapura today

Easter Sunday attacks: Rs 265 million in compensation paid so far

Kim Kardashian West drops Kimono brand name