சூடான செய்திகள் 1

விடாமுயற்சியுடன் காணாமல் போன சிறுவனை தேடும் காவல்துறையினர்

(UTV|COLOMBO)-பலாங்கொடை – சமனலவத்த பகுதியில் காணாமல் போன 10 வயது சிறுகனை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 50 பேர் கொண்ட இராணுவக் குழுவால் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்ட போதும், சிறுவன் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் தேடுதல் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலாங்கொடை – சமனலவத்தை வித்தியாலயத்தில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சஹன் தர்மசிறி என்ற மாணவனே கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல்போயுள்ளார்.

பாடசாலை முடிந்தவுடன் வீடு திரும்பிய குறித்த மாணவன், விறகு வெட்டச் சென்ற தமது தந்தையைத் தேடுவதற்காக அருகிலுள்ள வனப் பகுதிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த வனப்பகுதியில் உளாவும் புலியொன்று மாணவனை கொண்டு சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், அவ்வாறு புலியொன்று மாணவனை இழுத்துச் சென்றிருக்குமாயின் அவரின் உடற்பாகங்களாவது கிடைத்திருக்கும் என பலாங்கொடை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் விசேட அறிவிப்பு

editor

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதிக்கு-நீதியமைச்சு

கடும் காற்றுடன் மழை