வகைப்படுத்தப்படாத

சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு – 17 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

(UTV|INDIA)-இந்தியாவின் சென்னையில் 11 வயதான விசேட தேவையுடைய சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் 17 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து பல மாதங்களாக குறித்த சிறுமி கூட்டு பாலியலுக்கு உள்ளாக்கி இருப்பதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுமி குடியிருக்கும் மாடி வீட்டுத் தொகுதியின் மின் உயர்த்தி பணியாளரே, இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதான சந்தேக நபர், சிறுமிக்கு போதைபொருளை வழங்கி, பின்னர் அவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நிலையில் மற்றையவர்களும் குற்றம் புரிந்துள்ளனர்.

அவர்களுள் தொடர்மாடி குடியிருப்பு பாதுகாப்பு அதிகாரி, மின்சார மற்றும் நீர்குழாய் திருத்துனர்களும் உள்ளடங்குகின்றனர்.

கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள குறித்த 17 பேரும் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இந்தியாவில் பல எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

IAEA chief Yukiya Amano dies at 72

Crawl Director would love to make Nightmare on Elm Street reboot

මදුෂ්ගේ හා කංජිපානිගේ සමීපතමයෙකු අත්අඩංගුවට