வகைப்படுத்தப்படாத

வெயிலின் தாக்கத்தால் 14 பேர் பலி

(UTV|JAPAN)-உலக நாடுகளுடன் தனது வணிக ரீதியிலான போட்டியில் முதன்மையாக விளங்கும் ஜப்பான் நாட்டில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும், பலர் தங்கள் வீடு, உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் ஜப்பான் ராணுவத்துடன் மக்களும் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது ஜப்பானின் பல்வேறு நகரங்களில் சுமார் 39 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

දුම්රිය වර්ජනය තවදුරටත් ක්‍රියාත්මකයි

Flour price hike irks Bakery Owners

රටවල් 48ක සංචාරකයින්ගෙන් හෙට සිට මාසයක් වීසා ගාස්තු නොකෙරේ