வகைப்படுத்தப்படாத

போதை மருந்து கடத்தலை தடுக்க 60 நாள் அவசர நிலை பிரகடனம்

(UTV|SOUTH AFRICA)-தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. அண்டை நாடான கொலம்பியாவில் இருந்து பலர் எல்லை தாண்டி இங்கு நுழைகின்றனர். அவர்கள் மூலம் இவை கடத்தப்படுவதால் நாட்டில் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அதை தடுக்க பெரு நாட்டில் கொலம்பியா எல்லையில் புதுமேயோ பகுதியில் உள்ள அமேஷோனியன் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது 60 நாட்கள் அமலில் இருக்கும். அதற்கான உத்தரவை பெரு நாட்டின் அதிபர் மார்டின் விஷ்காரா பிறப்பித்துள்ளார். அதை தொடர்ந்து எல்லையில் போதை பொருள் கடத்தல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு கொலம்பியாவின் ராணுவமும், போலீசும் உதவி வருகிறது. போதை பொருள் கடத்தல்காரர்கள் ஊடுருவலை கண்காணிக்க 5 ஹெலிகாப்டர்கள், 3 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அவர்கள் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 50 பேரை கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி விலகல்

Three die in Medawachchiya motor accident

அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த தம்பிக்க பெரேரா!