கேளிக்கை

சிவகார்த்திகேயன் படத்தில் செந்தில் கணேஷ்

(UTV|INDIA)-சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீம ராஜா’ படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமாகிறார் ‘சூப்பர் சிங்கர் 6’ பட்டத்தை வென்ற செந்தில் கணேஷ்.

செந்தில் கணேஷை முதன்முதலில் பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார் இசையமைப்பாளர் டி.இமான். யுகபாரதி இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

ஏற்கெனவே ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிய பல போட்டியாளர்களைத் தன்னுடைய இசையமைப்பில் பாடவைத்து பின்னணிப் பாடகராக்கியிருக்கிறார் டி.இமான். வேறுசில பாடகர்களும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தாலும், அதிகமானோருக்கு வாய்ப்பு கொடுத்த பெருமை டி.இமானையே சேரும்.

பொன்ராம் இயக்கியுள்ள ‘சீம ராஜா’ படத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்கள். சிம்ரன், சூரி, நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.

படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 13-ம் திகதி உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஓவியாவை ஏன் பிடிக்கும் என காரணம் கூறிய ஆரவ்

ரஜினி – கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்

முத்தையா முரளிதரனாக பிரதி எடுக்கும் விஜய் சேதுபதி